சூர்யா படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் ஒப்பந்தம்
பிரபல நடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிங்கம் 3’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் சுறுசுறுப்பாக உள்ளார்.
‘தானா சேர்ந்த கூட்ட’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்ன் நாயகி தேர்வு குறித்த பணியில் இருந்த விக்னேஷ் சிவன் தற்போது கீர்த்திசுரேஷ் உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் ‘ரெமோ’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்தவரும், இளையதளபதி விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்து வருபவருமான கீர்த்திசுரேஷூக்கு அடுத்த பெரிய படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் திரையுலகில் நுழைந்த ஒன்றரை வருடத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா ஆகிய இருவருக்கும் நாயகியாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்டுடியோக்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.