கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாவித்ரி’ படப்பிடிப்பு தொடங்கியது
தமிழ் திரையுலகில் நடிகையர் திலகம் என்ற பட்டத்துடன் வலம் வந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கீர்த்திசுரேஷூக்கு மேக்கப் போட்டு முடிந்ததும், அவர் அப்படியே சாவித்ரி போலவே இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த படத்தில் சாவித்ரியின் தோழி கேரக்டரில் சமந்தா நடிக்கின்றார். இவர் இவர் இந்த படத்தில் பத்திரிகையாளராகவும் நடிக்கின்றார். இந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா என்ற தெலுங்கு நடிகர் நடிக்கவுள்ளாராம்.
மேலும் இந்த படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். நாக்-அஸ்வின் இந்த படத்தை இயக்கி வருகிறார்