டெல்லி சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சத்தை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் முதல்கட்டமாக லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
011-27357169 என்ற எண்ணுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரி கொடுத்த தகவல் கொடுத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்தி அவர் தவறு செய்திருப்பது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தகவல் கொடுத்தவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2013ஆம் ஆண்டில் செய்ததை போலவே ஜனதா தர்பாரை நடத்தி பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.