7 வருடமாக குழந்தை இல்லை. மனைவியின் கைகளை வெட்டிய கணவன்

7 வருடமாக குழந்தை இல்லை. மனைவியின் கைகளை வெட்டிய கணவன்

kenya kenya1கென்யாவில் கணவர் ஒருவர் தனது மனைவி ஏழுவருடங்களாக தனக்கு குழந்தை பெற்று தரவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார். இந்த வெறிசெயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கென்யாவில் Jackline Mwende என்ற பெண்ணை Stephen Ngila என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணம் செய்த நாளில் இருந்து தனக்கு ஒரு குழந்தையை பெற்றுத்தருமாறு மனைவியை அவர் வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் ஏழு வருடங்களாக இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த Stephen Ngila தனது மனைவியின் இரு கைகளையும் மணிக்கட்டு வரை வெட்டி எறிந்துள்ளார். இரண்டு கைகளையும் இழந்த அவரது மனைவி கதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் Stephen Ngila தந்தையாகும் தகுதி இல்லாதவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply