மின்னணுமயமாகும் கேரள சட்டசபை. காகிதத்திற்கு குட்பை

மின்னணுமயமாகும் கேரள சட்டசபை. காகிதத்திற்கு குட்பை

keralaகேரள சட்டப்பேரவை முழுக்க முழுக்க மின்னணுமயமாக மாற்றப்பட உள்ளதால் அம்மாநில சட்டசபையில் இனி காகித பயன் பாடு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேரள மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ராமகிருஷ்ணன் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள சட்டப்பேரவையில் 140 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் கேள்விகளைக் காகிதத்தில் அளிக்காமல் ஆன்லைனில் அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் சிலர் மட்டுமே ஆன்லைன் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். எனவே அனைவரும் ஆன்லைனுக்கு மாறும் வகையில் சிறப்பு பயிற்சி முகாமை நடத்த உள்ளோம்.

பேரவையில் ஒவ்வொரு உறுப்பினருக்கு முன்பாகவும் கணினி பொருத்தப்படும். அந்த கணினி மூலம் அவரவர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வளர்ச்சித் திட்டங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்தத் திட்டம் மூலம் கேரள சட்டப்பேரவை விரைவில் காகிதம் இல்லாமல் மின்னணுமயமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply