அசத்தும் மாநில நிர்வாகம்
நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனாஇல்லாத மாநிலமாக மாறி வருவதால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் தான் முதல் முதலாக இந்தியாவில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆரம்பத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமும் கேரளாதான்
இருப்பினும் அம்மாநில முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது கேரளாவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறி வருகிறது
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் நேற்று ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளார். அதே போல் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து கொண்டே வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா மாறாக இருப்பதாக கூறப்படுகிறது