நான் வெற்றி பெற்றால் தரமான மாட்டிறைச்சி கிடைக்கும். பாஜக வேட்பாளரின் உறுதிமொழி
மாட்டிறைச்சிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பாஜக கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மாட்டிறைச்சிக்கு புகழ்பெற்ற கேரளாவில் தரமான மாட்டிறைச்சி கிடைக்கும் என பாஜக தலைவர் ஒருவரே கூறியுள்ளது பலவரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் என் ஸ்ரீபிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார்.
கேரளாவை பொருத்தவரையில் மாட்டிறைச்சிக்கு எதிரான பிரச்சாரம் எடுபடாது என்பதால் தனது கொள்கையை தலைகீழாக மாற்றி கொண்ட பாஜக வேட்பாளர் கேரளா முழுவதும் தரமான மாட்டிறைச்சியை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்ரீபிரகாஷ் பிரச்சாரத்தின்பொது வாக்குறுதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தும், மாட்டை இறைச்சிக்காக பயன்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படுகின்றன. ஆனால் கேரளாவில் பெரும்பாலானோரால் உண்ணப்படும் மாட்டிறைச்சிக்கு தடை போட முடியாது என்பதால், இங்கு மாட்டிறைச்சி விஷயத்தில் பாஜக பின் வாங்கியுள்ளது.