சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது குறித்த பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை. உம்மன்சாண்டி

சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது குறித்த பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை. உம்மன்சாண்டி

Sabarimala-சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வந்த பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் அந்த கோயிலில் கடைப்பிடிக்கப்படும் மரபுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் கேரள அரசு தலையிடாது என்று கேளர முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உம்மண்சாண்டி, சபரிமலை கோயிலுக்குள் 10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் பிரச்சனைக்கு முடிவு எடுப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முடிவு எடுக்கட்டும்.

தடை விதிக்கப்பட்டுள்ள கோயில்களுக்குள் பெண்களை அனுமதிப்பதிப்பது குறித்து சில இந்து அமைப்புகளும், ஆர்எஸ்எஸ் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளது. இந்த பிரச்சனையை பொருத்தவரை சுப்ரீம்கோர்ட் நல்ல முடிவை எடுக்கும் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள மாநிலத்தில் இயங்கி வரும் இரண்டு இந்து அமைப்புகள் பொது நல மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா? என்று சபரிமலை கோயில் நிர்வாகத்துக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply