மாட்டிறைச்சி விருந்து வைத்த ஐஐடி மாணவர் மீது தாக்குதல். கேரள முதல்வர் கண்டனம்

மாட்டிறைச்சி விருந்து வைத்த ஐஐடி மாணவர் மீது தாக்குதல். கேரள முதல்வர் கண்டனம்

சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் என்பவர் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐஐடி வளாகத்திலேயே மாட்டிறைச்சி திருவிழா ஒன்றை நடத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற மாணவர்கள் சூரஜை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சூரஜை அடித்தது மாணவர்கள் அல்ல என்றும், வெளியில் இருந்து வந்த மர்ம நபர்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூரஜ் தாக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வர் எந்த கருத்தும் கூறாத நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதாவது:

மாணவர் சூரஜ் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்பாராத ஒன்று. இதனை கண்டிக்கிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்,’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply