மாநில முதல்வர் ஒருநாள் ஆசிரியராக மாறும் அதிசயம். இங்கல்ல..கேரளாவில்

மாநில முதல்வர் ஒருநாள் ஆசிரியராக மாறும் அதிசயம். இங்கல்ல..கேரளாவில்

kerala cmவரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில் அன்றைய தினம் கேரள மாநில முதல்வர் பினராய்விஜயன் ஆசிரியராக பணிபுரியவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கேரள முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் பினராய்விஜயன், ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியை பொறுத்தே உள்ளது என்றும் பொதுமக்களுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் அன்றைய ஒருநாள் மட்டும் தனது சொந்த தொகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக மாறி பாடம் நடத்தவுள்ளார்.

அவர் மட்டுமின்றி அன்றைய தினம் கேரளாவில் உள்ள அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் முதல்வரை பின்பற்றி அவரவர்களின் தொகுதியில் அன்று ஒருநாள் ஆசிரியராக மாறவுள்ளனர். முதல்வரின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply