கொரோனாவை விரட்டியடித்த கேரள மக்கள்

இயல்பு நிலை திரும்புகிறது

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனாவின் தாக்கம் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது.

: நான்கு மாவட்டங்களை தவிர கேரள மாநிலம் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்ப இருப்பதாகவும் இதற்காக அம்மாநிலம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

நான்கு மண்டலங்களில், ‘ஆரஞ்சு- -ஏ, ஆரஞ்சு -பி’ மண்டலங்களில் உள்ள, பத்தணந்திட்டை, எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, திருச்சூர் மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுகிறது என்றும் இந்த பகுதிகளில் ஒற்றை இலக்க தனியார் வாகனங்கள் திங்கள், புதன், வெள்ளியும், இரட்டை இலக்க வாகனங்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பெண்கள் ஓட்டும் வாகனங்களுக்கும் இலக்க கட்டுப்பாடு கிடையாது. ஓட்டல்கள், அத்தியாவசிய பொருள் கடைகள், இரவு, 7.00 மணி வரை இயங்கலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முடிதிருத்தும் கடை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply