கேரள மாநிலம் கொச்சி நகரில்‘காதல் முத்தம்’ போராட்டம் நடத்த முயன்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு பி.டி. உஷா சாலையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாக உள்ளூர் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியதை அடுத்து கடந்த 23 ஆம் தேதி அங்கு சென்ற பா.ஜ.க மற்றும் சிவசேஎனா கட்சியினர் ஃபேஸ்புக் ஆர்வலர்கள் மிது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக‘ஃபேஸ் புக்’ சமூக வலைத்தள ஆர்வலர்கள் ராகுல் பசுபாலன் மற்றும் அவரது மனை தலைமையில், நேற்று மாலை ஒன்று திரண்டனர். ஓட்டல் சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் கொச்சியில் மரைன் டிரைவ் மைதானத்தில் காதல் முத்தம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். காதலர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் இந்த போராட்டம் இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என கூறி சிவசேனா, இளைஞர் காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் போராட்டம் நடத்துவதற்காக நேற்று மாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் சட்டக்கல்லூரியிலிருந்து, கொச்சி மரைன் டிரைவ் மைதானம் நோக்கி ஃபேஸ் புக்’ சமூக வலைத்தள ஆர்வலர்கள் திடீரென பேரணியாகப் புறப்பட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ராகுல் பசுபாலனும், அவரது மனைவியும் அடங்குவர்.