கேரளாவில் பரபரப்பு
ஊரடங்கு நேரத்தில் வேலையின்றி வருமானமின்றி சாப்பாடும் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருந்த வாலிபர் ஒருவரை அவரது நண்பர் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருந்தார்
அடைக்கலம் கொடுத்த நண்பர் என்றும் பாராமல் அந்த நண்பரின் மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த வாலிபர் ஓடிப் போய்விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து மனைவி குழந்தைகளை இழந்து தவித்து வரும் அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் ஓடிப்போன பெண் மற்றும் அவரது காதலனை அழைத்து விசாரணை செய்தனர் அந்த பெண்ணுக்கு போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அந்த பெண் தனது புதிய காதலனுடன் தான் செல்வேன் என்று கூறினார். அது மட்டுமின்றி தனது குழந்தைகளையும் அவர் அழைத்துச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தனது கணவரின் கார் மற்றும் தனது நகைகள் அனைத்தையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது