எம்.எல்.ஏ – கலெக்டர் காதல். விரைவில் திருமணம்

எம்.எல்.ஏ – கலெக்டர் காதல். விரைவில் திருமணம்

கேரளாவை சேர்ந்த இளம் வயது எம்.எல்.ஏ ஒருவரும், அதே மாநிலத்தில் துணை கலெக்டராக பணிபுரிந்து வரும் ஒரு பெண்ணும் கண்டவுடன் காதல் கொண்டு விரைவில் இல்லறத்தில் இணையவுள்ளனர்.

கேரள மாநிலத்தின் அருவிக்கரா என்ற தொகுதியின் எம்.எல்.ஏ சபரிநாதன் முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயன் என்பவரது மகன் ஆவார். எம்பிஏ பட்டதாரியான இவர் தந்தை இறந்தவுடன் அரசியலில் குதித்து தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் துணை கலெக்டராக பணிபுரிந்து வரும் திவ்யாவை ஒரு வேலை நிமித்தம் சந்தித்த எம்.எல்.ஏ சபரிநாதன், கண்டவுடன் காதல் கொண்டார். திவ்யாவும் சபரிநாதனும் பேசி பழகிய போதும் இருவரும் பலவிஷயங்களில் ஒத்து போனதை கண்டனர்.

எனவே இருவீட்டார்களும் பேசி விரைவில் அவர்களுடைய சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சபரிநாதன் எம்.எல்.ஏ தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: நான் முதன்முதலாக திவ்யாவை திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். அப்போது இருவரும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்துகள் கொண்டிருப்பது தெரிந்தது. இரு வீட்டாரின் ஆசிர்வாதத்தோடு,திவ்யா எனது வாழ்க்கைத் துணையாக இருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply