கேரள பள்ளி மாணவிகளுக்கு சர்ச்சைக்குரிய சீருடை: புகைப்படம் எடுத்தவர் மீது வழக்கு

கேரள பள்ளி மாணவிகளுக்கு சர்ச்சைக்குரிய சீருடை: புகைப்படம் எடுத்தவர் மீது வழக்கு

கேரள மாநிலம் கோட்டையம் நகரத்தில் உள்ள அருவிதுரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு சர்ச்சைக்குரிய சீருடை வழங்கப்பட்டதாகவும், இந்த் சீருடையுடன் கூடிய மாணவிகளை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சர்ச்சைக்குரிய சீருடையுடன் கூடிய மாணவியின் புகைப்படத்தை வெளியிட்ட புகைப்படக்காரர் மீது பள்ளி நிர்வாகம் குழந்தைகள் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின்(POCSO) கீழ் போலீசில் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் எராட்டுபெட்டா போலீசாரும் புகைப்படக்காரர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பள்ளியின் முதல்வர் ரோஸ்லி கூறுகையில், “புகைப்படம் வெளியாகும் வரை மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு எதிர்ப்பும் எழவில்லை. பள்ளி சீருடையில் எந்த பிரச்சனையும் இல்லை, பார்ப்பவர்களின் கண்களில் தான் கோளாறு உள்ளது என்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சபு சைரைக் கூறினார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த சீருடையை பள்ளி நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்றும் ஆபாசம் இல்லாத சீருடையை மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply