கேரளா சிவப்பு மீன் குழம்பு

images (6)

என்னென்ன தேவை?

மீன் – 300 கிராம்
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1- சிறியதாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
புளி – சிறிதளவு

எப்படி செய்வது?

சுத்தம் செய்து வைத்துள்ள மீனை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் மஞ்சள் தூளை சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும். ஊறவைத்து கரைத்த புளி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூளை எடுத்து தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி அரைத்த மசாலா பதத்திற்கு வைத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடாகியதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்துக்கிளறவும்.

அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் கலந்து வைத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூளை சேர்த்து கிளறவும். பின்னர் மீனுடன் உப்பு சேர்த்து கிளறி புளி தண்ணீரை சேர்த்து மீனை வேகவிடவும் தேவைப்பட்டால் தண்ணீரும் சேர்த்து மீனை வேகவைக்கலாம். இறக்கும்போது சிறிது கறிவேப்பிலை தூவி கொள்ளவும்.

Leave a Reply