கேரளா சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தது யார்? பாய்பிரண்ட் என்ற தகவலால் குழப்பம்
சமீபத்தில் கேராஅவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் அம்மாநிலத்தில் உள்ள சாமியார் ஒருவரின் ஆணுறுப்பை கல்லூரி மாணவி ஒருவர் வெட்டினார் என்பதுதான். அந்த மாணவியை கேரள முதல்வரே பாராட்டினார்.
இந்த நிலையில் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியவர் மாணவி இல்லை என்றும் அந்த மாணவியின் பாய்பிரண்டு என்றும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் சாமியார் போலீஸிடம் கொடுத்த வாக்குமூலத்தில் அந்தப் பெண் ஆணுறுப்பை அறுத்து வீசவில்லை, நானே அறுத்துவிட்டேன் என தெரிவித்தார்.
இந்நிலையில் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்தபோது, புதிய திருப்பமாக, அப்பெண்ணின் தாயார் போலீஸ் விசாரணையில் ’தமது மகள் மனநிலை சரியில்லாதவர்; அவரது ஆண் நண்பர்தான் சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தார்.’ என தெரிவித்துள்ளார். இதனால் சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.