நோட்டோவுக்கே எங்கள் ஆதரவு. கேரளாவில் கொடி பிடிக்கும் பெண் வாக்காளர்கள்

நோட்டோவுக்கே எங்கள் ஆதரவு. கேரளாவில் கொடி பிடிக்கும் பெண் வாக்காளர்கள்

notaதமிழகத்தை போலவே கேரளாவிலும் அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அம்மாநிலத்தில் நோட்டாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருகின்றது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் பெண் செயற்பாட்டாளர்கள் என்ற அமைப்பு ஆன்லைனில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றது. பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் நோட்டாவுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்த அமைப்பு ஆன்லைன் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றது

கேரளாவில் வாழும் பெண்களில் 70%-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கும் தகுதியில் இருந்தும், சட்டப்பேரவையில் பெண்களின் பங்களிப்பு 5%-க்கும் குறைவாகவே உள்ளது என்பதே பெண்கள் செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு.

நோட்டா பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்பவர்களில் ஒருவரான திவ்யா திவாகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “கேரளாவின் ஆட்சி வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பார்த்தால், இதுவரை ஆட்சி செலுத்திய பிரதான கட்சிகள் பெரும்பாலானவை பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை பொருத்தவரை எங்களை ஏமாற்றவே செய்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த அநீதியை எதிர்த்து நாங்கள் முதலில் குரல் கொடுப்பதே சரியானதாக இருக்கும். அதிகார மட்டத்தில் திட்டமிட்டே பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply