சிக்கன் பர்கரில் கோழி கழிவுகள். வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட கே.எப்.சி நிறுவனம்

சிக்கன் பர்கரில் கோழி கழிவுகள். வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட கே.எப்.சி நிறுவனம்
kfc2
உலகின் பல நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள உணவு நிறுவனம் கே.எப்.சி, கோழி இறைச்சி இணைந்துள்ள பர்கரில் கோழிக்கு பதிலாக கோழி கழிவை வைத்து ஒரு வாடிக்கையாளருக்கு பரிமாறியிருந்ததாகவும், இதனால் அந்த நிறுவனம் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கே.எப்.சியின் இங்கிலாந்து நாட்டு கிளையில் கசாண்ட்ரா ஹாரிஸ் என்ற 22 வயது இளம்பெண் ஃபார்மாசிஸ்ட் சிக்கன் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்த ஒருசில நிமிடங்களில் அவருக்கான உணவு வந்தது. ஆனால் அந்த பர்கரில் சிக்கனுக்கு பதிலாக மூளை, இறைப்பை உள்பட கோழிக்கழிவுகள்தான் இருந்தது.

இது குறித்து ஹாரிஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு வந்த பர்கர் பிங்க் நிறத்தில் பார்க்கவே கேவலமாக இருந்தது. நான் அதை தொடக்கூட விரும்பவில்லை. பார்ப்பதற்கு மூளை அல்லது நுரையீரலின் பச்சை மாமிசம் போல் இருந்தது. அதுமட்டுமின்றி எனது பர்கரில் தலைமுடியும் இருந்தது. நிச்சயமாக என் வாழ்நாளில் இனி ஒரு போதும் இனி கே.எப்.சி உணவகத்தில் சாப்பிட மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ள கே.எப்.சி நிர்வாகம், “நீக்கப்பட வேண்டிய நேரத்தில் கோழியின் கழிவுகள் நீக்கப்படாமல் போவதால் மிகவும் அரிதான தருணங்களில் எதிர்பாராதவிதமாக இது போன்ற தவறுகள் நடந்து விடுகிறது. வருங்காலத்தில் உணவின் சுகாதாரம் குறித்து கூடுதல் அக்கறையுடன் இருக்குமாறு எங்கள் ஊழியர்களுக்கு நினைவு படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்கள் உணவில் ஏதேனும் குறை இருந்தால் எங்களிடம் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.எப்சி-யின் கலிபோர்னியா மாநில கிளையில் கோழிக்கு பதிலாக எலியை பொறித்துக் கொடுத்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

kfc kfc1

Chennai today news: KFC customer horrified after finding chicken meal full of raw giblets as she was about to eat it

Leave a Reply