வங்கதேச முன்னாள் பெண் அதிபர் கலிதா ஜியா நீதிமன்றத்தில் சரண்
வங்கதேச அரசுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா கைது செய்யப்படுவார் என செய்திகள் கடந்த சில நாட்களாக உலவி வந்த நிலையில் நேற்று கலிதா ஜியா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதால் தற்போதைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் ஷேக் ஹஸினாவின் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தபோது அந்த போராட்டத்தை கலிதா ஜியாதான் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த போராட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. ஜத்ராபரி என்ற பகுதியில் ஒரு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப் பட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் கலிதா ஜியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு எதிராக பிடிவாரண்ட் ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கலிதா ஜியா நீதிமன்றத்தில் சரணடைந்தபோது வங்கதேச தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது என்ற தகவல் வெளிவந்தவுடன் அங்கு ஏற்பட்ட பதற்றம் தணிந்தது.
Chennai Today News: Khaleda Zia surrendered in court