செல்பி மோகத்தால் உயிரிழந்த டால்பின்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
உலகில் தற்போது சிறுவர் முதல் வயதானவர்கள் வரை செல்பி மோகத்தில் மூழ்கி உள்ளனர். ஆபத்தான் செல்பி எடுப்பதால் செல்பி எடுப்பவர்களும் மற்றவர்களும் பலியாகி வரும் செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தெற்கு ஸ்பெயின் நாட்டில் ஒரு குட்டி டால்பின் தாயை விட்டு பிரிந்து கரை ஒதுங்கியது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் மாறி மாறி அந்த டால்பினை கையில் வைத்து கொண்டு செல்பி எடுத்தனர். ஒரே நேரத்த்தில் பலர் முண்டியடித்து டால்பினுடன் செல்பி எடுத்ததால் ஒருகட்டத்தில் அந்த டால்பி இறந்தேவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் செல்பி எடுத்தவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். செல்பி மோகத்தால் ஒரு டால்பின் உயிரிழந்தது குறித்து அந்த பகுதி மக்களும் கவலையில் மூழ்கியுள்ளனர்.