வடகொரிய அதிபர் சகோதரர் உடல் டி.என்.ஏ பரிசோதனை கூறுவது என்ன?

வடகொரிய அதிபர் சகோதரர் உடல் டி.என்.ஏ பரிசோதனை கூறுவது என்ன?

சமீபத்தில் மலேசியாவில் வடகொரிய அதிபரின் சகோதரர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாட்டு நல்லுறவை சீர்குலைக்கும் அளவுக்கு சென்றது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றியது முதல் பரபரப்பான சம்பவங்கள் நடந்தேறின.

இந்நிலையில் டி.என்.ஏ பரிசோதனை மூலம், உயிரிழந்தது வடகொரிய அதிபரின் சகோதரர் கிம்-ஜாங்-நம் என்பதை மலேசிய அரசு தற்போது உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த மரணம் கொலைதான் என்றும் தெரியவந்துள்ளது.

கொலைசெய்யப்பட்ட கிம்-ஜாங்-நம்மின் டி.என்.ஏ, அவரது குழந்தைகளின் டி.என்.ஏ. உடன் ஒத்துப்போனதால் உயிரிழந்தது அவர் தான் என்பதை மலேசிய அரசு அதனை உறுதி செய்துள்ளதால் தற்போது இந்த சடலத்தை பெற வடகொரிய அதிபரின் குடும்பம் முன்வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த உடல் கிம்-ஜாங்-நம்-மின் உடல்தான் என உறுதிப்படுத்தாதவரை சடலத்தை பெறப்போவதில்லை என வட கொரியா அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply