டிரம்ப் சந்திப்பின்போது நான் கொலை செய்யப்படலாம்! கிம் ஜாங் உன் அதிர்ச்சி தகவல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில் இந்த சந்திப்பின்போது தான் கொலை செய்யப்படலாம் என கிம் ஜாங் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது’
தென்கொரியாவிலும் சிலர் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும், அவர்கள் இந்த சந்திப்பை பயன்படுத்தி தன்னை கொல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கிம் ஜாங் அன் செய்தியாளர்களிடம் சமீபத்தில் தெரிவித்தார். கிம் தான் கொலை செய்யப்படலாம் என்”று கூறியதை அடுத்து இந்த சந்திப்பு நிகழும் செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.