சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அதிபரின் காதலி உயிருடன் திரும்பி வந்தது எப்படி? வடகொரியாவில் பரபரப்பு

7aபாலியல் உறவில் ஈடுபடும்போது வீடியோ எடுக்கப்பட்டதால் மரண தண்டனைக்கு ஆளாகி சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வடகொரிய அதிபரின் காதலி தற்போது மீண்டும் உயிருடன் வந்து தொலைகாட்சியில் பேட்டியளித்துள்ளதால் வடகொரியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 வடகொரிய அதிபரின் முன்னாள் காதலி Hyon Song-wol என்ற இளம்பெண், ஒரு இசைக்குழுவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் Hyon Song-wol, வெளிநாடு ஒன்றிற்கு இசைநிகழ்ச்சி நடத்த சென்றிருந்தபோது இசைக்குழுவில் உள்ள சக ஊழியர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதோடு, அதை வீடியோவும் எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அதற்காக அவருக்கு இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும், அவரையும், அவரது இசைக்குழுவில் இருந்தவர்களையும் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் செய்தி வெளியானது. ஜப்பானின் செய்தி நிறுவனம் ஒன்று இந்த செய்தியை உறுதி செய்திருந்தது.

 இந்நிலையில் நேற்று வடகொரிய தொலைக்காட்சி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட Hyon Song-wol நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி கொடுத்தார். வடகொரிய அதிபர் மிகவும் திறமையானவர் என்றும் துணிச்சலானவர் என்றும் அவரை புகழ்ந்து தனது பேட்டியில் Hyon Song-wol கூறினார்.

 சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் தொலைகாட்சியில் பேட்டி கொடுத்துள்ளதால் வடகொரியவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

7a

7aa

Leave a Reply