சிங்கப்பூர் சந்திப்பை அடுத்து அமெரிக்கா செல்கிறார் வடகொரிய அதிபர்

சிங்கப்பூர் சந்திப்பை அடுத்து அமெரிக்கா செல்கிறார் வடகொரிய அதிபர்

நேற்று சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பு மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நிகழ்த்தினர். இந்த சந்திப்பின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனால் கொரிய தீபகற்பத்தில் இனி அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம் ஜாங் அன் அவர்களை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார்.

இருதரப்பினர்களும் அழைத்தாலும் டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் ஜாங் அன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு பின்னர் டிரம்ப் வடகொரியா செல்வது குறித்து முடிவெடுப்பார் என தெரிகிறது.

Leave a Reply