புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றார் கிரண்பேடி

புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றார் கிரண்பேடி

kiran bediபுதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாரி ரமேஷ் கிரண்பேடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில் புதுவை மாநில முதலமைச்சராக விரைவில் பதவியேற்கவுள்ள நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆளுனர் பதவியேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் கல்வி, சுகாதாரம், மீன்வளம், சுற்றுலா, விவசாயம், தொழில்துறை, பெண்கள் நலன், பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளையும் மேம்படுத்தி புதுச்சேரி மாநிலத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற பாடுபடுவேன்.

Leave a Reply