டெல்லியில் கிரண்பேடி முதல்வர் வேட்பாளர். பாஜக அதிகாரபூர்வ அறிவிப்பு.

kiranசமீபத்தில் பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி டெல்லி முதல்வர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நிறுத்தப்படுவதாக பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதனால் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது டெல்லி முழுவதும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அற்விக்கப்பட்டதை அடுத்து பாஜகவும் தனது கட்சியின் முதல்வர் வேட்பாளரை நேற்று அறிவித்தது.

புதுடெல்லியில் நேற்று கூடிய பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி ஆகியொர் கலந்து கொண்டனர். அதில், முதல்-மந்திரி வேட்பாளர் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், கூட்டத்தின் இறுதியில், சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இத்தகவலை கட்சி தலைவர் அமித் ஷா நிருபர்களிடம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “முதல்-மந்திரி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அவர் தலைமையில் தேர்தலை சந்திப்போம். கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார். அது, பா.ஜனதாவின் பாரம்பரிய தொகுதி. கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியதில் கட்சியில் யாருக்கும் எவ்வித அதிருப்தியும் இல்லை என அமித் ஷா கூறினார்.

ஆனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் புதியதாக சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவியா என முணுமுணுத்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply