கவர்னர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும். புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமிகும் கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கருத்துமோதல்கள் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. ஆட்சியை குறை சொல்லி வரும் கவர்னர் கிரண்பேடி அவ்வபோது புதுவை அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அரசின் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் துணை நிலை ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில், முதலமைச்சர் நாராயணசாமிஅறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மருத்துவ கவுன்சில் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முறையாக நிரப்பப்பட்டதாக கூறினார். அதனால் துணை நிலை ஆளுநர் கூறிய குற்றச்சாட்டுக்களை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் மற்றும் அரசின் மீதான தவறான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.