தெருவை சுத்தப்படுத்தினால் ‘கபாலி’ டிக்கெட். கிரண்பேடியின் புதுமை திட்டம்
சமீபத்தில் புதுவை மாநிலத்தின் துணை நிலை ஆளுனராக பொறுப்பேற்ற கிரண்பேடி, மாநிலத்தை தூய்மையாக்க பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தெருக்களை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் அவரே நேரில் சென்று ஆலோசனைகள் வழங்கி அவர்களை ஊக்குவித்தும் வருகிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் இலவச டிக்கெட்டுக்களை பொதுசேவை செய்ய அதாவது மாநிலத்தை தூய்மைப்படுத்த முன்வருபவர்களுக்கு வழங்குமாறு புதுவை கலெக்டருக்கு கிரண்பேடி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த திட்டம் புதுவை மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தலைவர் படத்தின் டிக்கெட்டை பெற பலர் முன்வந்துள்ளதாகவும் இதனால் புதுவை மாநிலமே தூய்மையாகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதூ.
மேலும் ‘தூய்மை புதுவை’ திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரஜினிகாந்த் பதவியேற்க வேண்டும் என்று கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் அனேகமாக ரஜினி-கிரண்பேடி சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.