கிச்சன் டிப்ஸ்!

Kitchen tips-jpg-1157

தீபாவளி போன கையோடு வாங்கின பொருட்கள் செய்யாமலேயே சமையலறையில தூங்கிக்கிட்டு இருக்கா? அதுமட்டுமில்ல மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா? ஒரு குட்டி டிப்ஸ் இதோ உங்களுக்காக….

  • மைசூர் பாகு, பர்பி, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகள் தூளாக மிஞ்சிவிட்டதா? கவலையை விடுங்கள். இவற்றுக்காகவே போளி செய்து இனிப்புத் துகள்களைப் பூரணத்துடன் கலந்து உபயோகிக்கலாம்.
  • முறுக்கு வகைகளை ஆரம்பத்திலேயே தண்ணீ­ர் கலந்து பிசையாமல் வெண்ணெய், உப்பு மற்றும் எல்லாச் சாமான்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும் இந்த உதிரான மாவை ருசி பார்த்துப் பிறகு நீர் கலந்து பிசைந்தால் அதிகம் ஊறாமலும் அளவான உப்பு, கார ருசியுடனும் இருக்கும்.
  • பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய் வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.
  • முறுக்கு அல்லது தேன் குழல் செய்யும்போது ஏலக்காய் விதையை நீர் தெளித்து மையாக அரைத்து மாவில் கலந்து கொள்ளலாம். ஏலக்காய் மணத்தில் முறுக்கு, தேன்குழல் கமகமவென்று இருக்கும்.
  • தினமும் பாலைக் காய்ச்சி ஃப்ரிட்ஜில் வையுங்கள். ஆடை நன்றாகப் படியும். தினமும் இந்த ஆடையைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜிலேயே வைத்து விடுங்கள். ஒரு வாரம் சென்றபின் அரை லிட்டர் பாலில் தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும். ஃபிரிட்ஜில் சேகரித்திருக்கும் ஆடையைச் சேர்த்துக் கிளறி ஏலப் பொடி, முந்திரி சேர்க்கவும். சுவையான பாஸந்தி செய்ய ஓர் எளிய வழி இது.

Leave a Reply