டிப்ஸ்… டிப்ஸ்…

download

எண்ணெய்ப் பாத்திரங்களைத் தேய்க்கும்போது, முதலில் அவற்றை டிஷ்யூ பேப்பரால் அழுந்த துடைத்துவிட்டு, பிறகு தேய்த்தால்… எளிதாகத் துலக்கிவிடலாம். தண்ணீரும் குறைவாக செலவாகும்.

குக்கரில் உள்ள கேஸ்கட்டை உபயோகிக்கும் நேரம் போக, மற்ற நேரத்தில் நீர் நிரம்பிய தொட்டிகளில் கிடக்கும்படி செய்தால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

அடுப்பிலிருந்து பாத்திரங்களை எடுத்தவுடன், ‘சிங்க்’ அடியில் வைத்து குழாயைத் திருப்பிவிட்டால், அவற்றின் ஆயுள் குறையும். சூடு ஆறியதும்தான் பாத்திரங்களைக் குழாயின் அடியில் வைக்க வேண்டும்.

வீட்டு அடுக்களையில் ஒரு டம்ளரில் மண் வைத்து, அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால், துளிர் விட்டு வளர்ந்ததும், அதன் வாடைக்குப் பல்லி வரவே வராது.

அதிரசம் உதிர்ந்து போகிறதா..? மாவில் கொதிக்கும் பாலை ஊற்றி மூடுங்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு, நன்கு கிளறி, எண்ணெயைக் கையில் தொட்டு, மாவைத் தட்டுங்கள். மிருதுவான, மிக ருசியான, உடையாத அதிரசம் தயார்!

Leave a Reply