டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கெளசிக் சாட்டர்ஜி அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா…
1995-ம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.
டாடா சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு முதல் டாடா ஸ்டீல் ஐரோப்பிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் இந்நிறுவனத்தின் நிரந்தர இயக்குநராகவும் உள்ளார்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியாற்றியவர்.
முதலீட்டாளர் தொடர்பு, நிதி உத்திகள், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், வரி உத்திகள் மற்றும் திட்டமிடுதல் ஆகியவற்றில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர்.
சிஎன்பிசி வெளியிட்ட சிறந்த தலைமை நிதி அதிகாரி பட்டியலில் இடம் பிடித்தவர்.
`செபி’-யின் ஒழுங்குமுறை ஆலோசனைக் கமிட்டியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
டாடா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.