கோச்சடையானை பார்க்க விரும்பும் ஜேம்ஸ் கேமரூன். புதிய தகவல்

kochadaiiyaan -james-cameron

உலகில் முதன்முதலாக மோஷன் கேப்ட்சர் திரைப்படத்தை அறிமுகப்படுத்திய பெருமை ஜேம்ஸ் கேமரூனை சாரும். அவர் இயக்கிய அவதார் உலகின் பல நாடுகளில் பெரும் வெற்றியை பெற்றது. கடந்த 2009ஆம் அண்டு 237 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சுமார் 5 ஆண்டுகாலம் தயாரிக்கப்பட்ட அவதார், உலகம் முழுவதும் சுமார் 3000 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது.

தற்போது அதே மோஷன் கேப்ட்சர் முறையை பின்பற்றி எடுக்கப்பட்ட படம்தான் கோச்சடையான். இந்த படத்தை பற்றி கேள்விப்பட்ட ஜேம்ஸ் கேமரூன், கோச்சடையான் படத்தை பார்க்க விரும்புவதாக இயக்குனர் செளந்தர்யாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இந்த தகவலை நேற்று செளந்தர்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோச்சடையான் படத்தை ஜேம்ஸ் கேமரூனுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ திரையிட அனைத்து நடவடிக்கையும் எடுக்க தற்போது முயற்சித்து வருகிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

Leave a Reply