கோச்சடையான் படத்தின் பெயரில் கார்பான் நிறுவனம் வெளியிட்ட மொபல் போன்களை நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் படத்தின் இயக்குனர் செளந்தர்யா வெளியிட்டார். இந்த விழாவில் கார்பான் மொபைல்ஸ் நிறுவனர் சுதிர் ஹசிஜா அவர்களும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செளந்தர்யா ரஜினிகாந்த்,’ தீபிகா படுகோனேவுடன் காதல் காட்சியில் நடிக்கும்போது எனது அப்பா மிகவும் கூச்சப்பட்டதாகவும், மகள் முன் எப்படி ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது என்பதில் அவருக்கு தயக்கம் இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ரஜினிகாந்த் புதிய வரவுகளை மிகவும் ஆதரிப்பவர் என்பதால், மகள் என்ற கோணத்தில் மட்டும் தன்னை பார்க்காமல் ஒரு புதிய இயக்குனராக என்னை நினைத்து, எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று கூறினார்.
அவதார், டின் டின் போன்ற மோஷன் கேப்சர்ஸ் படங்கள் வெளியாக ஆறேழு வருடங்கள் ஆனது என்றும், அதேபோன்ற படம் கோச்சடையான் என்பதால் படத்தினை தயாரிக்க நீண்ட காலங்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறிய செளந்தர்யா, இந்த படம் ஆறு மாதத்தில் எடுத்துவிட்டு ஏழாவது மாதத்தில் வெளிவரும் சாதாரண படம் இல்லை என்றும் கூறினார்.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1i3Ubxo” standard=”http://www.youtube.com/v/WUgKaJ767JM?fs=1″ vars=”ytid=WUgKaJ767JM&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep6633″ /]