மலேசியா நாட்டில் KLANG CENTRAL என்ற பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் ஒரு புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தயாந்தி என்ற மலேசிய சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள கொடிய நோய் ஒன்றின் சிகிச்சைக்காக நிதி திரட்ட முடிவு செய்து வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் கோச்சடையான திரைப்படத்தின் ஒரு காட்சிக்குரிய டிக்கெட்டுக்கள் முழுவதையும் வாங்கியுள்ளனர்.
இந்த டிக்கெட்டுக்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தொகையை சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட ரஜினிகாந்த், டிக்கெட் விற்பனை செய்த பணம் போக, மீதி எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ, அந்த பணம் முழுவதையும் தானே கொடுத்துவிடுவதாக வாக்கு கொடுத்துள்ளார்.
கோச்சைடையான் திரைப்படத்தின் 9ஆம் தேதி பகல் 12 மணிக்காட்சிக்கு மலேசிய ரோட்டரி கிளப்பில் இருந்து டிக்கெட்டுக்களை பெற விரும்புவர்கள் KLANG SRI RASI SILKS என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும், டிக்கெட்டின் விலை RM 100 ஆகும்.