தனுஷின் 50 வயது கேரக்டர். இதுவரை வெளிவராத ‘கொடி’ தகவல்

தனுஷின் 50 வயது கேரக்டர். இதுவரை வெளிவராத ‘கொடி’ தகவல்

dhanush-oldதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொடி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இதுவரை தனுஷ் அண்ணன் – தம்பி என்ற இரு வேடங்களில் நடித்து வருவதாகத்தான் தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் தனுஷ் அண்ணன் – தம்பியாக நடிக்கவில்லை என்றும் அப்பா-மகன் வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்முறையாக 50 வயது கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளதாகவும் இந்த கெட்டப்பின் ரகசியம் இதுவரை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

‘எதிர்நீச்சல், ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் ‘கொடி’ படத்தை இயக்கியுள்ளார். தனுஷூக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். மேலும் தனுஷின் காட்பாதராக இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Kodi Dhanush getup secret revealed

Leave a Reply