கோடி காலம் வரை இறவாமலிருக்க-என்ன செய்ய வேண்டும்

Photo0198

என்றுதான் லட்சமுரு செபித்தாற் சித்தி
இறவாமல் இருத்துமடா கோடிகாலம்
நன்றுகாண் முப்பத்தி ரெண்டாந் திட்சை
நங் கிலி சிங் கிலி என்றே லட்சம்
மன்றுள்ள காலம்வரை இரு;ததுந்தேகம்
வாழ்;த்திநீ தோத்திரங்கள் செய்துகொள்வாய்
கொன்றாலும் வாள்கொண்டு வெட்டினாலும்
குறையாமல் வாள்வெட்டுப் பொருந்துந்தானே.”        -அகத்தியர்

முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். நங் கிலி சிங் கிலிஎன்று லட்சம்உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ளகாலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய்.கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம்சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார். இந்த தீட்சைகளில்கூறப் பட்டிருக்கும் மந்திரங்களை வெற்று ஒலிகள் என ஒதுக்கி விடஇயலாது. இதன் பின்னால் மறைந்திருக்கும் சூட்சுமங்கள்புலப்படுமாயின் மகத்தான பல விஷயங்கள் புலனாகலாம்.

Leave a Reply