2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது

இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே போட்டியை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:

1 பிபிஷா 2 மயாங்க் அகர்வால் 3 விராத் கோஹ்லி, 4 ஸ்ரேயாஸ் அய்யர், 5 கே.எல்.ராகுல், 6 ஜாத 7 ஜடேஜா, 8 ஷர்துல் தாக்கூர் 9 சயினி 10 பும்ரா 11 சாஹல்

நியூசிலாந்து: 1 நிக்கோலஸ், 2 குப்தில், 3 சேப்மான், 4 ப்ளண்டல் 5 லாதம் 6 டெய்லர் 7 நீஷம் 8 கிராந்தோம் 9 செளதி 10 ஜேமிசன் 11 பென்னட்

Leave a Reply