48 ரன்களில் சுருண்டு கேவலமாக தோல்வி அடைந்த பெங்களூர் அணி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 27வது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீசமுடிவு செய்தார். இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் ஐந்து ஓவர்களில் அடித்து ஆடினாலும், பின்னர் சொதப்பலான ஆட்டம் காரணமாக 131 ரன்கள் மட்டுமே எடுத்தனர்
இந்த நிலையில் 132 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் வெறும் 48 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. விராத் கோஹ்லி உள்பட எந்த பெங்களூர் வீரரும் இரட்டை இலக்கத்தில் ரன் எடுக்கவில்லை என்பதும் இந்த போட்டித்தொடரில் மிகக்குறைந்த ஸ்கோர் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணி பந்துவீச்சாளர் நைல் ஆட்டநாயகன் விருது பெற்றார்