ஐபிஎல் 2016: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா
2016ஆம் ஆண்டின் ஐ.பி.எல் போட்டிகள் சமீபத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் முதல் போட்டியில் ரோஹித் சர்மாவின் மும்பை அணியை தோனி தலைமையிலான புனே அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதியது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி, டெல்லி அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 98 ரன்களை மட்டுமே எடுத்தது.
வெற்றி பெற 99 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 14.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கவுதம் காம்பீர் 38 ரன்களும், ராபின் உத்தப்பா 35 ரன்களும் எடுத்தனர்.
இன்று பஞ்சாப் அணிக்கும் குஜராத் அணிக்கும் மொகாலியில் போட்டி நடைபெறவுள்ளது.