காம்பீர், உத்தப்பா அதிரடியால் வீழ்ந்தது புனே
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்று புனேவில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் புனே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மித் 51 ரன்களும் ரஹானே 46 ரன்களும், எடுத்தனர்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி மிக எளிதாக எந்தவித டென்சனும் 18.1 ஓவர்களில் 3விக்கெட்டுக்களை மட்டுமே 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த உத்தப்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். காம்பீர் 62 ரன்கள் எடுத்தார்
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தனது முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. தோல்வி அடைந்த போதிலும் தொடர்ந்து புனே 8 புள்ளிகள் எடுத்து 4வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.