ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா. உத்தப்பா அதிரடி ஆட்டம்

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா. உத்தப்பா அதிரடி ஆட்டம்

Kings XI Punjab captain David Miller during match 13 of the Vivo Indian Premier League ( IPL ) 2016 between the Kings XI Punjab and the Kolkata Knight Riders held at the IS Bindra Stadium, Mohali, India on the 19th April 2016 Photo by Ron Gaunt / IPL/ SPORTZPICS

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மில்லர் தலைமையிலான பஞ்சாப் அணியும், கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மொகாலி மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியின் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. மார்ஷ் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 56 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஓரிலக்க ரன்களில் அவுட் ஆகினர்.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி உத்தப்பாவின் அதிரடி ஆட்டத்த்தால் 17.1 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உத்தப்பா 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இன்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.

Leave a Reply