ராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு செல்கிறது கொல்கத்தா
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் 49வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்று அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 143 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லின் 45 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் குல்தீவ் யாதவ் ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார்.