கிலோ கணக்கில் கொரோனா ஸ்வீட்களை இலவசமாக கொடுத்த கடைக்காரர்: பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பலர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்
இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் ஒருவர் கிலோ கணக்கில் கொரோனா |ஸ்வீட்டுக்களை உருவாக்கி அவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்தார்
இதுகுறித்து அந்த கடைக்காரர் கூறிய போது ’ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கொரோனா வைரஸால் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கொரோனா வைரஸ் உருவம் கொண்ட ஸ்வீட்டூகளை செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அவர் கூறினார்
இந்த ஸ்வீட்டுகளை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது