முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு திரையுலகம் ஆதரவு

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு திரையுலகம் ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் சமாதி அருகே கொடுத்த பேட்டி தமிழக அரசியல் சரித்திரத்தில் பொன்னெழுத்தாக எழுத வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரது நேற்றைய பேட்டிக்கு திரையுலகினர்களும் அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் யார் யார் என்னென்ன கூறினார்கள் என்பதை தற்போது பார்ப்போம்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு: ‘தமிழக மக்களில் ஒரு சிலரைத் தவிர்த்து மற்ற அனைவரும் நிம்மதியாக தூங்குவார்கள், ‘ஒரு நாயகன் உதயமாகிறான்’

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன்: ‘சாது மிரண்டது, சுயமரியாதை வென்றது’

நடிகை கெளதமி: ‘இதற்காகத்தான் அம்மா ஓ,பி.எஸ்ஸை தேர்ந்தெடுத்தார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர். அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்’

தயாநிதி அழகிரி: ‘ஓ.பி.எஸ் இவ்வளவு துணிச்சலாய் செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள் முதல்வரே! ஆனால் எந்நேரமும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம்’

நடிகர் அருள்நிதி: ‘தைரியமான பேச்சு ஓ.பிஎஸ் சார். உண்மையை உரக்கச் சொன்னதன் மூலம் தமிழக மக்களுக்கு உங்களின் நேர்மையை நிரூபித்துவிட்டீர்கள்’

நடிகர் சித்தார்த், ‘ஓ.பி.எஸ் மெரினாவில் இருக்கிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் போன்ற சீரியல்களை நேரில் பார்ப்பது போல இருக்கிறது’

இசை அமைப்பாளர் இமான்: ‘தமிழக அரசியலில் இப்போதுதான் நம்பிக்கை பிறக்கிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியாக பேசியிருக்கிறார். நீதி வாழ்கிறது’

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்: ‘எவன் வந்து அடக்குவான் மறத்தமிழ் மகன் உனை, இறப்பினி ஒரு முறை, துணிந்து நீ பகை உடை. உலகுக்கு உரக்க சொல்!’

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம்: ‘இறுதியாக ஓ.பி.எஸ் நிமிர்ந்து நிற்கிறார்’

இன்னும் பல பிரபலங்கள் ஓபிஎஸ் அவர்களின் அதிரடியை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply