பாலசந்தர் உடல் தகனம். திரையுலக பிரபலங்கள் இறுதி அஞ்சலி.

      k-balachander

திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் உடல், சென்னையில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

kb funeral 1

இயக்குநர் கே.பாலசந்தர் (84) மூச்சுத் திணறல், சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (டிச.23) காலமானார்.  சென்னை, மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலை முதல் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்து பாலசந்தரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

kb funeral 2

இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, நடிகர்கள் சிவகுமார், சரத்குமார், ராதாரவி, சரத்பாபு, ராஜேஷ், சத்யராஜ், செந்தில், ஒய்.ஜி.மகேந்திரன், பிரகாஷ்ராஜ், விஜய், விவேக், அர்ஜுன், நெப்போலியன், தனுஷ், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் மனோரமா, ஸ்ரீப்ரியா, குஷ்பு, ராதிகா, ஜெயஸ்ரீ, சுஹாசினி உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பாலசந்தருக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

kb funeral 3

இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர், பாலா, கே.எஸ்.ரவிகுமார், பாண்டியராஜன், பி.வாசு, விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகரன், அமீர், சேரன், வசந்த், தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், ஏவி.எம்.சரவணன், பிரமிட் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பாலசந்தருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

kb funeral
பத்திரிகையாளர் சோ, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 3 மணிக்கு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மயிலாப்பூரிலிருந்து மந்தைவெளி, அடையாறு வழியாக சென்ற இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை மாலை 5 மணிக்கு அடைந்தது. வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இயக்குநர் பாலசந்தருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

kb1

கருப்புச் சட்டையில் ரஜினி: மயிலாப்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாலசந்தரின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு (டிச.23) நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், புதன்கிழமை காலையிலும் பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சில நிமிஷங்கள் மட்டுமே அங்கிருந்த ரஜினி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பாலசந்தரின் இறுதி ஊர்வலம் புறப்பட்டதும் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து மாலை 4.05 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்.

kb

பாலசந்தரின் உடல் தகனத்தின்போது இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், விக்ரமன், பாலா, அமீர், சரண், சமுத்திரக்கனி, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், விவேக், சரத்பாபு, நடிகைகள் ரேகா, சுஹாசினி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பெசன்ட் நகர் மின் மயானத்தில் திரண்டிருந்தனர்.

மாலை 5.30 மணியளவில் வைதீக முறைப்படி பாலசந்தரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இளைய மகன் பிரசன்னா பாலசந்தரின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் பாலசந்தரின் உடல் எரியூட்டப்பட்டது.

Leave a Reply