[carousel ids=”65726,65727,65728″]
அகத்தியர், திருமூலர், திருமாளிகைத் தேவர், போகர் ,கருரார், கொங்கணர் என அனேக சித்தர்களால் ஆராதிக்க பட்ட திருத்தலம் திருவாவடுதுறை கோவிலாகும் . திருமூலர் இத்தலத்தில் அரச மரத்தின் கீழ் 3000 ஆண்டுகள் தவம் செய்து 3000 பாடல்கள் கொண்ட திருமந்திர ஞானப்பெருனூலை பாடி அருளிய திருத்தலம் . அழகிய விநாயகராய் அகத்திய மாமுனிக்கு ஞான உபதேசம் செய்தருளிய ஞானத்திருத்தலம்..
>> திருவாடுதுறையில் இருந்த திருமுலரை தரிசிக்க கொங்கணச் சித்தர் வருகிறார்…கொங்கணரை காண சீர்காழியில் வாழ்ந்த சட்டை நாதர் திருவாடுதுறை வந்தார் .சட்டைநாதர் கொங்கனரிடம் உபதேசம் பெற்றார் மேலும் தான் நினைத்த போதெல்லாம் கொங்கணரை சந்தித்து அளவளாவும் பேறு பெற்ற தலம் .
>> திருவாவடுதுறை திருத்தலத்தில்- கொங்கனேஷ்வர தோப்பில் கொங்கணர் சமாதி இருப்பதாக சித்தர் பாடல்களில் உள்ளது . கடந்த முறைகளில் தேடி பார்த்தேன். கொங்கணர் சமாதியை என்னால் கண்டறிய முடியவில்லை ..
>> இந்த முறை தேடி கண்ணுற்றதில் மகிழ்ச்சி என்ற போதிலும் சமாதி பீடம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது கண்டு வேதனை அடைந்தேன் பூஜை இன்றி கவனிப்பாரற்று கிடக்கிறது ..இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பின்புறம் கொங்கனேஷ்வர தோப்பு உள்ளது.ஆதிமுதல் கொங்கணர் தோப்பு என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது.. திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான இடமாக தான் இருக்க முடியும் ..
>> திருப்பதி மூல கருவறை ஸ்தானமே – கொங்கணரின் சமாதி ஸ்தலமாகும் ..அது தவிர இங்குதான் அவர்க்கு சமாதி உள்ளது .இந்த புனிதமான ஆலயம் அழிந்து போகாமல் காக்க படவேண்டும் ..பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ..அது இருக்கும் அளவிற்கு சிறிய பட்ஜெட்டில் புனரமைப்பு செய்தால் போதும் ..நாம் அனைவரது ஒத்துழைப்போடும் நல்லகாரியம் நடக்கட்டும் .பெரியோர்கள் ஆலோசனை தாருங்கள்..