கூடங்குளம் உதயகுமார் டெல்லி பயணம். பிரதமரை சந்திக்க முயற்சி.

uday_1821629eகூடங்குளம் எதிர்ப்பு குழுவின் தலைவர் உதயகுமார் தனது குழுவினர்களுடன் இன்று டெல்லி வந்தடைந்தார். அவர் இன்று மத்திய அமைச்சர்களை சந்தித்து  கூடங்குளத்தில் அணு உலைகளை நிறுவக்கூடாது என்று வலியுறுத்துவார் என தெரிகிறது. மேலும் அவர் பிரதமர் நரேந்திரமோடியையும் சந்திக்க முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கூடங்குளத்தில் இயங்கி வரும் முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகளில் ஏகப்பட்ட குளறுபடி நடந்துள்ளதாகவும் இந்நிலையில் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளை நிறுவக் கூடாது என்பதை மத்திய அமைச்சர்களிடம் நேரில் வலியுறுத்தவே தான் டெல்லி வந்திருப்பதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரை நேரில் சந்தித்து கூடங்குளம் பற்றிய உண்மை விவரங்களை எடுத்து கூற உள்ளதாகவும், முடிந்தால் பிரதமரையும் நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் பிரதமரை சந்திப்பது என்பது கடினமான காரியம் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply