முடிஞ்சதை பாருங்க, பதவி விலக முடியாது: கோத்தபய ராஜபக்சே

முடிஞ்சதை பாருங்க, பதவி விலக முடியாது: கோத்தபய ராஜபக்சே

பதவி விலக மாட்டேன், என்ன ஆனாலும் பரவாயில்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இடையேயான சந்திப்பு இன்று நடந்தது

இந்த சந்திப்பில் நாளை மாலை புதிய அமைச்சரவை பதவியேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச, பசில ராஜ பக்ச, சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சர் பதவியை ஏற்காதிருக்க முடிவு செய்துள்ளனர்.

எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சியமைக்க அழைத்த போதும், அவர்கள் முன்வராத காரணத்தால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.