கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயில் கடந்த பல மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது
இந்த நிலையில் தற்போது இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் உதய் விரைவு ரயில் மார்ச் 31ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது
இதனை அடுத்து பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
ஏற்கனவே பல ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது உதய் விரைவு ரயில் இயக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது